சிரிப்பொலியை புதைத்து விட்டோம்!
முகமூடிகளுக்குள் நம்
முகங்களை தொலைத்து விட்டோம்!
நிம்மதியை நசுக்கி விட்டோம்!
நாகரிகம் என்ற பெயரில்
நாணத்தை கழட்டி விட்டோம்!
மரத்துப்போன மனிதனுக்குள்
மங்கிப்போனது மனித நேயம்!
கணிப்பொறி உலகினில்
காட்சிகளுக்குக் குருடானோம்!
கட்டாயம் இல்லை என்றால்
சுவாசிக்கவும் மறந்திருப்போம்!
இவை
இனி நீடிக்குமானால்
நாளை
அணுகுண்டுகள் சோதிக்க
பாலைவனங்கள் மட்டுமே மிஞ்சும்!

kuragilirinthu manidhan endra nilai mari meendum mirugam aagiran manidhan.
ReplyDelete