ஏக்கம்

சிறுகை நீட்டி அழைத்தாய்!
சிற்றேயிறு  காட்டிச் சிரித்தாய்
எச்சில் விரல்களால் என்
கன்னம் தீண்டினாய்!
என் கற்பனையின் வடிவானாய்!
காய்க்கா கிளைகளில்
கனியானாய்!- என்
ஏக்கக் குழிகளில்
பாலாய்  நிறைந்தாய்! - என்
விரிய இதழ்களின்
வாசமாய் வந்தாய்! - கண்
வலரா  இரவுகளின்
கனவாய் முளைத்தாய்!
நான் செய்த பாவம்
நீ
பக்கத்து வீட்டில் பிறந்து விட்டாய்!

2 comments:

  1. naangal seitha punniyam, ungal ennaththil piranthathu intha kavithai.

    ReplyDelete
  2. "kaaika kilaigalil kaniyanai!" -- eththunai sirandha uvamai.
    " engirundhu pidiththeer indha oviaththai!!"

    ReplyDelete