ஒரு கவிஞனின் முற்றுபெறா கவிதை

கடற்கரையில் அமர்ந்து
காலத்தை மறக்க கண்களை மூடினேன்
சிந்தனையில் எதோ சிணுங்கள் சத்தம்
என் சிறகுகளை முடக்கியது!


நீண்ட இரவுகளில் என்
ஏக்க கனவுகளுக்குள் பயணம் தொடர்ந்தேன்
திடுக்கிடும் விழிப்பு என்
கனவுகளில் திராவகம் தெளித்தது!


புல்வெளியில்.......
பனித்துளியின் மினுமினுப்பில்.......
ஈரக்காற்றில்...........
மிரட்டும் இரவுகளில்........


பறவைகளின் கீச்சொலியில்......
என் கற்பனைகளைத்தொடுக்க  
 வரிகளைத்தேடும் போது
என் நினைவிற்கு வருவதெல்லாம்
கைகளைக்கட்டிப்போடும்
கடம் பாக்கிகளும்.....
அடுத்தவாரம் கட்ட வேண்டிய என்
குழந்தையின் பள்ளிக் கட்டணமும் தான்


என் கவிதைகள் முற்றுபெறாமல்
முடங்கியே கிடக்கின்றன...

1 comment:

  1. kavidhai nallarukku. aana ungal kavidhai muzhumai pera, kadan mattum en kitta kekkadeenga!

    ReplyDelete