இடிந்த குரல்கள்

நம்  சமுதாயத்தின்
மூலை முடுக்குகளில்
இன்னும் ஒலிக்கும்
இந்த இடிந்த குரல்கள்!



சமுதாயத்தின்
அகற்றப்பட்ட அழுகாய்
துடைக்கப்பட்ட எச்சமாய்
வாழும் ஒரு பிச்சைக்காரனின்
யாசிக்கும் குரலிது.....
"கோவிலோ மசூதியோ
ஒரு
வாசல் போதும்
நாங்கள் பிச்சை எடுக்க"



கைகளில் சோர்வு
வயிற்றில் பசி
அனால்
உழைக்க எண்ணும்
 ஒரு
ஏழை குடிமகனின் குரலிது........
'கோபுரம் எழுப்பவோ
பள்ளி வாசல் அமைக்கவோ
கல் தூக்கும் வேலையாவது கொடுங்கள்
எங்கள் குடிசைகளுக்குக்
கூரை போடுவதற்கு"



வீடுகளின் புறக்கடையில்
அழுக்குத்துனிகளுக்கு இடையேயும்
பாத்திர குவியல்களுக்கு இடையேயும்
தினம் தினம் நசுங்கும்
ஒரு
ஏழை சிறுமியின்
ஏக்கக் குரலிது..........
"கீதையோ குரானோ
ஒரு
புத்தகம் கொடுங்கள்
நாங்கள் எழுத்துக்களை அறிய"



பெறப் பிளைகளால்
துச்சமென்று துப்பப்பட்ட
ஒரு
மூதாட்டியின் நடுக்கக் குரலிது
"என் மகன் இராமன் வருவானோ?
அவர் மகன் அப்துல் வருவானோ?
எங்கள் கல்லறைகளுக்காவது மலர் தூவ
தெரியவில்லை
இவை போல்
இன்னும் எத்தனையோ குரல்கள்....



தன்னை தொலைத்து வாழ்வைத் தேடும்
மனிதக் குரல்கள்
இன்னும் இன்னும் ஒலிக்கின்றன.......

1 comment:

  1. vazvai tholaithu vazum manidhargaluku oru azagana devathayin kavithai.

    ReplyDelete