எனக்கு இருபது உனக்கு நாற்பது


நமக்கு இடையில் அதிகம் இருப்பது
வயது வித்யாசம் மட்டும் அல்ல
காதல் கனமும்தான் ...........

 தொட நினைக்கிறேன் தள்ளிப் போகிறாய்
வளர்வது இடைவெளி அல்ல ........
என் காதல் கனவுகள் ........

ஆயிரம் கேள்விகளுடன் விடை தெரியாமல் நான்.....
ஆயிரம்  விடைகளுடன் வழி தெரியாமல் நீ......
என்று சந்திக்கும் நம் கேள்வி பதிகள்??????

உன் காதோர நரைமுடியில் உன் மனதின் நிறம் பார்கிறேன்
உன் வாழ்க்கைப் புத்தகத்தில் ஒரு ஏடாய் இடம் கேட்கிறேன்
துடிக்கிறேன்......தவிக்கிறேன்.....அழைக்கிறேன்....நான்
நடிக்கிறாய்..........வெறுக்கிறாய் .........மறுக்கிறாய்......நீ

என் கண்ணங்களை உரசிப்போகையில்
கண்ணீரில் திராவகமாய் எறிவது உன் நினைவு.
என் மனதுக்குள் கனமாய் வலிப்பது உன் கனவு.

உன் பார்வை திரவியத்தில் என் மனது மசக்கையாகிறது.....
என் சிந்தனை அறைகளில் உன் மௌனம் ஏதிரோலிக்கிறது....






நட்பு



சொந்தமில்லை பந்தமில்லை.......
ரத்தத்தில் பிறந்த உறவுமில்லை......
இது
உணர்வுகளில் மலர்ந்து
உயிரில் வளரும் 
அழகான உறவு!

செல்லமாய்  கோபங்கள்....
சின்னதாய் சிணுங்கல்கள்.....
இந்த உறவில் மலரும் இனிமையான நிமிடங்கள்!

பாதங்கள் தேய்ந்து போனாலும்
பயணங்கள் முடிவதில்லை......
வார்த்தைகள் தீர்ந்து போனாலும்
எண்ணங்கள் தீர்வதில்லை......
உணர்வுகள் உலர்ந்து போனாலும்
இந்த
உறவு உதிர்வதில்லை!




இரவு

இமைகள் தவிக்கின்றன!
சேர்த்து வைக்கச்சொல்லி துடிக்கின்றன!


இமைகளின் இடைவெளி குறைப்போம்!
இருட்டுன் வாசலில் வண்ணக் கனவுகள் காண்போம்!

ஒரு கவிஞனின் முற்றுபெறா கவிதை

கடற்கரையில் அமர்ந்து
காலத்தை மறக்க கண்களை மூடினேன்
சிந்தனையில் எதோ சிணுங்கள் சத்தம்
என் சிறகுகளை முடக்கியது!


நீண்ட இரவுகளில் என்
ஏக்க கனவுகளுக்குள் பயணம் தொடர்ந்தேன்
திடுக்கிடும் விழிப்பு என்
கனவுகளில் திராவகம் தெளித்தது!


புல்வெளியில்.......
பனித்துளியின் மினுமினுப்பில்.......
ஈரக்காற்றில்...........
மிரட்டும் இரவுகளில்........


பறவைகளின் கீச்சொலியில்......
என் கற்பனைகளைத்தொடுக்க  
 வரிகளைத்தேடும் போது
என் நினைவிற்கு வருவதெல்லாம்
கைகளைக்கட்டிப்போடும்
கடம் பாக்கிகளும்.....
அடுத்தவாரம் கட்ட வேண்டிய என்
குழந்தையின் பள்ளிக் கட்டணமும் தான்


என் கவிதைகள் முற்றுபெறாமல்
முடங்கியே கிடக்கின்றன...

தொலைந்துப் போவதில் சுகமெனக்கு!


நான் ஆங்காங்கே தொலைந்துப் போகிறேன்!
ஒவ்வொரு உதயத்திலும்
ஒவ்வொரு அஸ்தமனத்திலும்
நான்
தொலைந்துப்போகிறேன்!
தொலைந்துப்போவதில் சுகமெனக்கு!


பனித்துளியை மணிமுடியாய்த் தாங்கும்
புற்களின் தலைகனத்தில்.....
கிளைகளை சிரிக்க வைக்கும்
காற்றின் சிலுமிசத்தில்.......
மாலை நேர மேகக்கரையின்
வைர கிரணங்களில்.....
நான் தொலைந்துப் போகிறேன்.!


புதுப் புத்தக வாசத்தில்......
கவிதை வரிகளின் ஆழத்தில்.....
இலக்கியங்களின் சந்தத்தில்.....
நான் தொலைந்துப் போகிறேன்.!


ஓசை இல்லா மௌனங்களில்....
காற்றில் மிதந்து வரும் மெல்லிசையில்.....
நிலவொளியில் மின்னும் நீரலையில்.....
அதிகாலை அமைதியிலும்....
இரவு நேர நிலவோளியிலும்.....
நான் தொலைந்துப் போகிறேன்.


கார் மேகங்களின் மத்தியில்....
முதல் துளியின் ஈரத்தில்....
அடை மழையின் அடர்த்தியில்......
என்
சன்னலோர நாற்காலியில்
நான் தொலைந்துப் போகிறேன்.!


மொட்டை மாடி நட்சத்திரங்களின் இடைவெளியில்...
விடியலில் பனி மூட்டங்களில்.....
தோட்டா சிணுங்கியின் சிணுங்கலில்....
தோட்டத்தில் பறக்கும்
வண்ணத்துப் பூச்சியின் வானவில் சிறகுகளில்....
நான் தொலைந்துப் போகிறேன்.!


சிட்டுக்குருவிகளின்
சின்ன அசைவுகளில்.....
ஒலி கடலின் இராட்சச ஆடல்களில்..
நான் தொலைந்துப் போகிறேன்!


நான் வைத்த ரோஜாச்செடியின்
முதல் பூவின் இதழ் இடுக்குகளிலும்......
புதைத்தாலும்  மண்ணைப் பிளந்து
தலைக்காட்டும்  விதையின் வீரியத்திலும்.....

மயானத்தின் தத்துவ அமைதியிலும்
நான் தொலைந்துப் போகிறேன்
இங்கெல்லாம் தொலைவதினால்தான்
எப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்!

கவிதை

உணர்ச்சிக் கூட்டத்தின்
ஒட்டுமொத்த வெளிப்பாடே!


சூல்கொண்ட வார்த்தைகள்
அணிவகுக்கும் மாநாடே!


மௌனத்தில் அரங்கேறி
மனதுக்குள் இசைக்கும் ஓசையே




கீறல்களில் உண்டாகும்
கிரணச்சூரியனே!


நீ
மனமுடித்தப் பின்புதான்
கைமைக் காகிதம்
அலங்கரித்துக் கொள்கிறது


சிந்தனை வீட்டில் வளர்கிறாய் - நீ
காலத்தின் ஏட்டில் பதிகிறாய்!

எப்போதும் வெல்லட்டும்




உள்ளத்தின் ஒளிந்திருக்கும் வேகத்தின் வேர்களே
உயரவலர்ந்து நிற்கும் விருட்சங்கள் ஆகட்டும்!
பெண்மைக்குள் பொதிந்திருக்கும் ஆவேச ஆண்மையே
தூசுதட்டி தீட்டிவிட்ட ஆயுதங்கள் ஆகட்டும்!


வெட்கத்தைக் கழட்டிவிட்டு வீரகவி பாடிடுவோம்
வேண்டாத அச்சத்தை அழித்துவிட்டு எழுந்த்திடுவோம்!
வெற்றியின் வாசலுக்குத் தோரணங்கள் ஆகிடுவோம்
வேகத்தின் வேள்வியில் வரமொன்று பெற்றிடுவோம்!


அச்சமில்லை ஆலமென்று நிமிர்ந்து நின்றிடுவோம்
வானத்தில் கூடநம் கிளைகளை விரித்திடுவோம்!
தடம்புரளா பாதைகளை அமைத்து விடுவோம்
தடைகளை தகர்த்து எரிந்து நடந்திடுவோம்!


கடமையின் முகவரிநமது நெற்றியில் தெரியட்டும்
காலத்தின் ரேகைநமது கைகளில் ஓடட்டும்!
பிரபஞ்சத்தின் ஒளிநமது கண்களில் மின்னட்டும்
பாசத்தின் வரிநமது மொழிகளில் மிளிரட்டும்!


உலகத்தின் கிழக்கில் ஒளியாக எழுந்திடுவோம்
உள்ளத்தில் தீப்பொறி தேக்கியே வைத்திடுவோம்!
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகமாகும்
உறைகின்ற வெண்பனி வார்த்தை சுத்தமாகும்!


முடியுமென்று மூச்சுபிடித்தால் முழுவுலகும் முதுகிற்குப்பின்தான்
முடியாதென்று ஏங்கிநின்றால் கடுகும் மலைகனமாகும்!
ஏக்கங்கள் தீரட்டும் பெண்மை வாழட்டும்
ஏமாற்றம் இல்லாமல் எப்போதும் வெல்லட்டும்!