வயது வித்யாசம் மட்டும் அல்ல
காதல் கனமும்தான் ...........
தொட நினைக்கிறேன் தள்ளிப் போகிறாய்
வளர்வது இடைவெளி அல்ல ........
என் காதல் கனவுகள் ........
ஆயிரம் கேள்விகளுடன் விடை தெரியாமல் நான்.....
ஆயிரம் விடைகளுடன் வழி தெரியாமல் நீ......
என்று சந்திக்கும் நம் கேள்வி பதிகள்??????
உன் காதோர நரைமுடியில் உன் மனதின் நிறம் பார்கிறேன்
உன் வாழ்க்கைப் புத்தகத்தில் ஒரு ஏடாய் இடம் கேட்கிறேன்
துடிக்கிறேன்......தவிக்கிறேன்.....அழைக்கிறேன்....நான்
நடிக்கிறாய்..........வெறுக்கிறாய் .........மறுக்கிறாய்......நீ
என் கண்ணங்களை உரசிப்போகையில்
கண்ணீரில் திராவகமாய் எறிவது உன் நினைவு.
என் மனதுக்குள் கனமாய் வலிப்பது உன் கனவு.
உன் பார்வை திரவியத்தில் என் மனது மசக்கையாகிறது.....
என் சிந்தனை அறைகளில் உன் மௌனம் ஏதிரோலிக்கிறது....
