கடற்கரையில் அமர்ந்து
காலத்தை மறக்க கண்களை மூடினேன்
சிந்தனையில் எதோ சிணுங்கள் சத்தம்
என் சிறகுகளை முடக்கியது!
நீண்ட இரவுகளில் என்
ஏக்க கனவுகளுக்குள் பயணம் தொடர்ந்தேன்
திடுக்கிடும் விழிப்பு என்
கனவுகளில் திராவகம் தெளித்தது!
புல்வெளியில்.......
பனித்துளியின் மினுமினுப்பில்.......
ஈரக்காற்றில்...........
மிரட்டும் இரவுகளில்........
பறவைகளின் கீச்சொலியில்......
என் கற்பனைகளைத்தொடுக்க
வரிகளைத்தேடும் போது
என் நினைவிற்கு வருவதெல்லாம்
கைகளைக்கட்டிப்போடும்
கடம் பாக்கிகளும்.....
அடுத்தவாரம் கட்ட வேண்டிய என்
குழந்தையின் பள்ளிக் கட்டணமும் தான்
என் கவிதைகள் முற்றுபெறாமல்
முடங்கியே கிடக்கின்றன...
தொலைந்துப் போவதில் சுகமெனக்கு!
நான் ஆங்காங்கே தொலைந்துப் போகிறேன்!
ஒவ்வொரு உதயத்திலும்
ஒவ்வொரு அஸ்தமனத்திலும்
நான்
தொலைந்துப்போகிறேன்!தொலைந்துப்போவதில் சுகமெனக்கு!
பனித்துளியை மணிமுடியாய்த் தாங்கும்
புற்களின் தலைகனத்தில்.....
கிளைகளை சிரிக்க வைக்கும்
காற்றின் சிலுமிசத்தில்.......
மாலை நேர மேகக்கரையின்
வைர கிரணங்களில்.....
நான் தொலைந்துப் போகிறேன்.!
புதுப் புத்தக வாசத்தில்......
கவிதை வரிகளின் ஆழத்தில்.....
இலக்கியங்களின் சந்தத்தில்.....
நான் தொலைந்துப் போகிறேன்.!
ஓசை இல்லா மௌனங்களில்....
காற்றில் மிதந்து வரும் மெல்லிசையில்.....
நிலவொளியில் மின்னும் நீரலையில்.....
அதிகாலை அமைதியிலும்....
இரவு நேர நிலவோளியிலும்.....
நான் தொலைந்துப் போகிறேன்.
கார் மேகங்களின் மத்தியில்....
முதல் துளியின் ஈரத்தில்....
அடை மழையின் அடர்த்தியில்......
என்
சன்னலோர நாற்காலியில்
நான் தொலைந்துப் போகிறேன்.!
மொட்டை மாடி நட்சத்திரங்களின் இடைவெளியில்...
விடியலில் பனி மூட்டங்களில்.....
தோட்டா சிணுங்கியின் சிணுங்கலில்....
தோட்டத்தில் பறக்கும்
வண்ணத்துப் பூச்சியின் வானவில் சிறகுகளில்....
நான் தொலைந்துப் போகிறேன்.!
சிட்டுக்குருவிகளின்
சின்ன அசைவுகளில்.....
ஒலி கடலின் இராட்சச ஆடல்களில்..
நான் தொலைந்துப் போகிறேன்!
நான் வைத்த ரோஜாச்செடியின்
முதல் பூவின் இதழ் இடுக்குகளிலும்......
புதைத்தாலும் மண்ணைப் பிளந்து
தலைக்காட்டும் விதையின் வீரியத்திலும்.....
மயானத்தின் தத்துவ அமைதியிலும்
நான் தொலைந்துப் போகிறேன்
இங்கெல்லாம் தொலைவதினால்தான்
எப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்!
கவிதை
உணர்ச்சிக் கூட்டத்தின்
ஒட்டுமொத்த வெளிப்பாடே!
சூல்கொண்ட வார்த்தைகள்
அணிவகுக்கும் மாநாடே!
மௌனத்தில் அரங்கேறி
மனதுக்குள் இசைக்கும் ஓசையே
கீறல்களில் உண்டாகும்
கிரணச்சூரியனே!
நீ
மனமுடித்தப் பின்புதான்
கைமைக் காகிதம்
அலங்கரித்துக் கொள்கிறது
சிந்தனை வீட்டில் வளர்கிறாய் - நீ
காலத்தின் ஏட்டில் பதிகிறாய்!
ஒட்டுமொத்த வெளிப்பாடே!
சூல்கொண்ட வார்த்தைகள்
அணிவகுக்கும் மாநாடே!
மௌனத்தில் அரங்கேறி
மனதுக்குள் இசைக்கும் ஓசையே
கீறல்களில் உண்டாகும்
கிரணச்சூரியனே!
நீ
மனமுடித்தப் பின்புதான்
கைமைக் காகிதம்
அலங்கரித்துக் கொள்கிறது
சிந்தனை வீட்டில் வளர்கிறாய் - நீ
காலத்தின் ஏட்டில் பதிகிறாய்!
எப்போதும் வெல்லட்டும்
உள்ளத்தின் ஒளிந்திருக்கும் வேகத்தின் வேர்களே
உயரவலர்ந்து நிற்கும் விருட்சங்கள் ஆகட்டும்!
பெண்மைக்குள் பொதிந்திருக்கும் ஆவேச ஆண்மையே
தூசுதட்டி தீட்டிவிட்ட ஆயுதங்கள் ஆகட்டும்!
வெட்கத்தைக் கழட்டிவிட்டு வீரகவி பாடிடுவோம்
வேண்டாத அச்சத்தை அழித்துவிட்டு எழுந்த்திடுவோம்!
வெற்றியின் வாசலுக்குத் தோரணங்கள் ஆகிடுவோம்
வேகத்தின் வேள்வியில் வரமொன்று பெற்றிடுவோம்!
அச்சமில்லை ஆலமென்று நிமிர்ந்து நின்றிடுவோம்
வானத்தில் கூடநம் கிளைகளை விரித்திடுவோம்!
தடம்புரளா பாதைகளை அமைத்து விடுவோம்
தடைகளை தகர்த்து எரிந்து நடந்திடுவோம்!
கடமையின் முகவரிநமது நெற்றியில் தெரியட்டும்
காலத்தின் ரேகைநமது கைகளில் ஓடட்டும்!
பிரபஞ்சத்தின் ஒளிநமது கண்களில் மின்னட்டும்
பாசத்தின் வரிநமது மொழிகளில் மிளிரட்டும்!
உலகத்தின் கிழக்கில் ஒளியாக எழுந்திடுவோம்
உள்ளத்தில் தீப்பொறி தேக்கியே வைத்திடுவோம்!
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகமாகும்
உறைகின்ற வெண்பனி வார்த்தை சுத்தமாகும்!
முடியுமென்று மூச்சுபிடித்தால் முழுவுலகும் முதுகிற்குப்பின்தான்
முடியாதென்று ஏங்கிநின்றால் கடுகும் மலைகனமாகும்!
ஏக்கங்கள் தீரட்டும் பெண்மை வாழட்டும்
ஏமாற்றம் இல்லாமல் எப்போதும் வெல்லட்டும்!
வெற்றி வரம் பெறுவோம்
அணுக்களின் ஆற்றல் நாம்!
வெளிச்சத்தின் வேகம் நாம்!
விதையின் வீரியம் நாம்!
திசைகளை திருப்பிப்போடுவோம்!
மேற்கிலும் உதயம் காண்போம்!
கிழக்கில் எப்போதும்
எங்கள் உதயம் தான்!
விலாசம் தேடி சூரியன்
வேறுதிசை போகட்டும்!
போர்கள் வேண்டாம்!
போர்க்களம் வேண்டாம்!
மதப் போர்வைகள் கிழிப்போம்!
மனித நேயம் வளர்ப்போம்!
ஆயுள் ரேகையில்
அனுபவம் வளர்ப்போம்!
காலத்தின் நெற்றியில்
நம் சுவடுகள் பதிப்போம்!
நம்மை எழுதிக்கொள்ள
சரித்திரத்தின் பக்கங்கள்
காத்துக்கிடக்கின்றன!
நம்மை வாசிக்க
பல நூற்றாண்டுகள் ஏங்குகின்றன!
உழைப்பின் வேள்வியில்
வியர்வை சிந்துவோம்
வெற்றி என்னும் வரம் பெறுவோம்!
வெளிச்சத்தின் வேகம் நாம்!
விதையின் வீரியம் நாம்!
திசைகளை திருப்பிப்போடுவோம்!
மேற்கிலும் உதயம் காண்போம்!
கிழக்கில் எப்போதும்
எங்கள் உதயம் தான்!
விலாசம் தேடி சூரியன்
வேறுதிசை போகட்டும்!
போர்கள் வேண்டாம்!
போர்க்களம் வேண்டாம்!
மதப் போர்வைகள் கிழிப்போம்!
மனித நேயம் வளர்ப்போம்!
ஆயுள் ரேகையில்
அனுபவம் வளர்ப்போம்!
காலத்தின் நெற்றியில்
நம் சுவடுகள் பதிப்போம்!
நம்மை எழுதிக்கொள்ள
சரித்திரத்தின் பக்கங்கள்
காத்துக்கிடக்கின்றன!
நம்மை வாசிக்க
பல நூற்றாண்டுகள் ஏங்குகின்றன!
உழைப்பின் வேள்வியில்
வியர்வை சிந்துவோம்
வெற்றி என்னும் வரம் பெறுவோம்!
பாலை வனங்கள் மட்டுமே மிஞ்சும்!
சில்லரைக் குவியல்களுக்கு அடியில்
சிரிப்பொலியை புதைத்து விட்டோம்!
முகமூடிகளுக்குள் நம்
முகங்களை தொலைத்து விட்டோம்!
வாகன நெரிசல்களுக்கு இடையியே
நிம்மதியை நசுக்கி விட்டோம்!
நாகரிகம் என்ற பெயரில்
நாணத்தை கழட்டி விட்டோம்!
மரத்துப்போன மனிதனுக்குள்
மங்கிப்போனது மனித நேயம்!
கணிப்பொறி உலகினில்
காட்சிகளுக்குக் குருடானோம்!
கட்டாயம் இல்லை என்றால்
சுவாசிக்கவும் மறந்திருப்போம்!
இவை
இனி நீடிக்குமானால்
நாளை
அணுகுண்டுகள் சோதிக்க
பாலைவனங்கள் மட்டுமே மிஞ்சும்!
சிரிப்பொலியை புதைத்து விட்டோம்!
முகமூடிகளுக்குள் நம்
முகங்களை தொலைத்து விட்டோம்!
நிம்மதியை நசுக்கி விட்டோம்!
நாகரிகம் என்ற பெயரில்
நாணத்தை கழட்டி விட்டோம்!
மரத்துப்போன மனிதனுக்குள்
மங்கிப்போனது மனித நேயம்!
கணிப்பொறி உலகினில்
காட்சிகளுக்குக் குருடானோம்!
கட்டாயம் இல்லை என்றால்
சுவாசிக்கவும் மறந்திருப்போம்!
இவை
இனி நீடிக்குமானால்
நாளை
அணுகுண்டுகள் சோதிக்க
பாலைவனங்கள் மட்டுமே மிஞ்சும்!
இடிந்த குரல்கள்
நம் சமுதாயத்தின்
மூலை முடுக்குகளில்
இன்னும் ஒலிக்கும்
இந்த இடிந்த குரல்கள்!
சமுதாயத்தின்
அகற்றப்பட்ட அழுகாய்
துடைக்கப்பட்ட எச்சமாய்
வாழும் ஒரு பிச்சைக்காரனின்
யாசிக்கும் குரலிது.....
"கோவிலோ மசூதியோ
ஒரு
வாசல் போதும்
நாங்கள் பிச்சை எடுக்க"
கைகளில் சோர்வு
வயிற்றில் பசி
அனால்
உழைக்க எண்ணும்
ஒரு
ஏழை குடிமகனின் குரலிது........
'கோபுரம் எழுப்பவோ
பள்ளி வாசல் அமைக்கவோ
கல் தூக்கும் வேலையாவது கொடுங்கள்
எங்கள் குடிசைகளுக்குக்
கூரை போடுவதற்கு"
வீடுகளின் புறக்கடையில்
அழுக்குத்துனிகளுக்கு இடையேயும்
பாத்திர குவியல்களுக்கு இடையேயும்
தினம் தினம் நசுங்கும்
ஒரு
ஏழை சிறுமியின்
ஏக்கக் குரலிது..........
"கீதையோ குரானோ
ஒரு
புத்தகம் கொடுங்கள்
நாங்கள் எழுத்துக்களை அறிய"
பெறப் பிளைகளால்
துச்சமென்று துப்பப்பட்ட
ஒரு
மூதாட்டியின் நடுக்கக் குரலிது
"என் மகன் இராமன் வருவானோ?
அவர் மகன் அப்துல் வருவானோ?
எங்கள் கல்லறைகளுக்காவது மலர் தூவ
தெரியவில்லை
இவை போல்
இன்னும் எத்தனையோ குரல்கள்....
தன்னை தொலைத்து வாழ்வைத் தேடும்
மனிதக் குரல்கள்
இன்னும் இன்னும் ஒலிக்கின்றன.......
மூலை முடுக்குகளில்
இன்னும் ஒலிக்கும்
இந்த இடிந்த குரல்கள்!
சமுதாயத்தின்
அகற்றப்பட்ட அழுகாய்
துடைக்கப்பட்ட எச்சமாய்
வாழும் ஒரு பிச்சைக்காரனின்
யாசிக்கும் குரலிது.....
"கோவிலோ மசூதியோ
ஒரு
வாசல் போதும்
நாங்கள் பிச்சை எடுக்க"
கைகளில் சோர்வு
வயிற்றில் பசி
அனால்
உழைக்க எண்ணும்
ஒரு
ஏழை குடிமகனின் குரலிது........
'கோபுரம் எழுப்பவோ
பள்ளி வாசல் அமைக்கவோ
கல் தூக்கும் வேலையாவது கொடுங்கள்
எங்கள் குடிசைகளுக்குக்
கூரை போடுவதற்கு"
வீடுகளின் புறக்கடையில்
அழுக்குத்துனிகளுக்கு இடையேயும்
பாத்திர குவியல்களுக்கு இடையேயும்
தினம் தினம் நசுங்கும்
ஒரு
ஏழை சிறுமியின்
ஏக்கக் குரலிது..........
"கீதையோ குரானோ
ஒரு
புத்தகம் கொடுங்கள்
நாங்கள் எழுத்துக்களை அறிய"
பெறப் பிளைகளால்
துச்சமென்று துப்பப்பட்ட
ஒரு
மூதாட்டியின் நடுக்கக் குரலிது
"என் மகன் இராமன் வருவானோ?
அவர் மகன் அப்துல் வருவானோ?
எங்கள் கல்லறைகளுக்காவது மலர் தூவ
தெரியவில்லை
இவை போல்
இன்னும் எத்தனையோ குரல்கள்....
தன்னை தொலைத்து வாழ்வைத் தேடும்
மனிதக் குரல்கள்
இன்னும் இன்னும் ஒலிக்கின்றன.......
ஏக்கம்
சிறுகை நீட்டி அழைத்தாய்!
சிற்றேயிறு காட்டிச் சிரித்தாய்
எச்சில் விரல்களால் என்
கன்னம் தீண்டினாய்!
என் கற்பனையின் வடிவானாய்!
காய்க்கா கிளைகளில்
கனியானாய்!- என்
ஏக்கக் குழிகளில்
பாலாய் நிறைந்தாய்! - என்
விரிய இதழ்களின்
வாசமாய் வந்தாய்! - கண்
வலரா இரவுகளின்
கனவாய் முளைத்தாய்!
நான் செய்த பாவம்
நீ
பக்கத்து வீட்டில் பிறந்து விட்டாய்!
சிற்றேயிறு காட்டிச் சிரித்தாய்
எச்சில் விரல்களால் என்
கன்னம் தீண்டினாய்!
என் கற்பனையின் வடிவானாய்!
காய்க்கா கிளைகளில்
கனியானாய்!- என்
ஏக்கக் குழிகளில்
பாலாய் நிறைந்தாய்! - என்
விரிய இதழ்களின்
வாசமாய் வந்தாய்! - கண்
வலரா இரவுகளின்
கனவாய் முளைத்தாய்!
நான் செய்த பாவம்
நீ
பக்கத்து வீட்டில் பிறந்து விட்டாய்!
பரிதாபம்
மண்ணை முட்டி மோதி
முதல் மூச்சுவிட்டு
அண்ணார்ந்து பார்த்து
திசைகளை தேர்ந்தெடுத்து
வானத்தில் கோலமிட எத்தனித்து
நம்பிக்கையோடு வாழ்வைத் தேடிக்
சிறகுகள் விரித்தது
ஈசல்....
நாளை விடியல்
அஸ்தமனம் என்பது தெறியாமல்.
Subscribe to:
Posts (Atom)









