நான் ஆங்காங்கே தொலைந்துப் போகிறேன்!
ஒவ்வொரு உதயத்திலும்
ஒவ்வொரு அஸ்தமனத்திலும்
நான்
தொலைந்துப்போகிறேன்!தொலைந்துப்போவதில் சுகமெனக்கு!
பனித்துளியை மணிமுடியாய்த் தாங்கும்
புற்களின் தலைகனத்தில்.....
கிளைகளை சிரிக்க வைக்கும்
காற்றின் சிலுமிசத்தில்.......
மாலை நேர மேகக்கரையின்
வைர கிரணங்களில்.....
நான் தொலைந்துப் போகிறேன்.!
புதுப் புத்தக வாசத்தில்......
கவிதை வரிகளின் ஆழத்தில்.....
இலக்கியங்களின் சந்தத்தில்.....
நான் தொலைந்துப் போகிறேன்.!
ஓசை இல்லா மௌனங்களில்....
காற்றில் மிதந்து வரும் மெல்லிசையில்.....
நிலவொளியில் மின்னும் நீரலையில்.....
அதிகாலை அமைதியிலும்....
இரவு நேர நிலவோளியிலும்.....
நான் தொலைந்துப் போகிறேன்.
கார் மேகங்களின் மத்தியில்....
முதல் துளியின் ஈரத்தில்....
அடை மழையின் அடர்த்தியில்......
என்
சன்னலோர நாற்காலியில்
நான் தொலைந்துப் போகிறேன்.!
மொட்டை மாடி நட்சத்திரங்களின் இடைவெளியில்...
விடியலில் பனி மூட்டங்களில்.....
தோட்டா சிணுங்கியின் சிணுங்கலில்....
தோட்டத்தில் பறக்கும்
வண்ணத்துப் பூச்சியின் வானவில் சிறகுகளில்....
நான் தொலைந்துப் போகிறேன்.!
சிட்டுக்குருவிகளின்
சின்ன அசைவுகளில்.....
ஒலி கடலின் இராட்சச ஆடல்களில்..
நான் தொலைந்துப் போகிறேன்!
நான் வைத்த ரோஜாச்செடியின்
முதல் பூவின் இதழ் இடுக்குகளிலும்......
புதைத்தாலும் மண்ணைப் பிளந்து
தலைக்காட்டும் விதையின் வீரியத்திலும்.....
மயானத்தின் தத்துவ அமைதியிலும்
நான் தொலைந்துப் போகிறேன்
இங்கெல்லாம் தொலைவதினால்தான்
எப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்!


"என் சன்னலோர நாற்காலியில்
ReplyDeleteநான் தொலைந்துப் போகிறேன்.!"
- ungal konjum kavithai kuzhathayin varudalil naan tholainthu pogiren.
ungal kavidhayil tholaindha ennai nan thedikondirukiren
ReplyDeleteதொலைந்த உங்களை தேடித் தேடி உங்கள்
ReplyDeleteகவிதையில் பயணித்து, எங்கள் வழி மறந்துபோனது !!
-- ஹேமா